Saturday 31 January 2015

கிரகங்ககளுக்கு உரிய தானியங்கள்



சூரியன்
கோதுமை
சந்திரன்
நெல்
செவ்வாய்
துவரை
புதன்
பச்சை பயறு
குரு
கொண்டைகடலை
சுக்கிரன்
மொச்சை
சனி
எள்
ராகு
உளுந்து
கேது
கொள்ளு


கிரகங்ககளுக்கு உரிய மலர்கள்





சூரியன்
செந்தாமரை
சந்திரன்
வெள்ளை அல்லி
செவ்வாய்
செண்பகம்
புதன்
வெண்காந்தல்
குரு
முல்லை
சுக்கிரன்
வெண்தாமரை
சனி
கருங்குவளை
ராகு
செவ்வரளி
கேது
மந்தாரை

Saturday 24 January 2015

மஹாசிவராத்திரி





வருகின்ற பிப்ரவரி 17 ஆம் தேதி மஹாசிவராத்திரி கொண்டாடபடுகிறது.
நவராத்திரி ஒன்பது நாட்கள் சக்திக்கு உரிய நாட்களாகும்.சிவராத்திரி
சிவனுக்கு உரியதாகும்.ன்று கண் விழித்து சிவபெருமானுக்கு அபிஷேக
ஆராதனைகள் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து சிவனை
வழிபட்டால் சகலசௌபாக்கியங்களையும் பெறலாம்.சிவன் கோவில்களில்
அன்று நான்கு ஜாமகால பூஜைகள் நடைபெறும்.

சிவ ராத்திரி அன்று காலையில் நீராடி விரதம் இருந்து சிவன் கோவிலுக்கு சென்று நமசிவாய அல்லது சிவாய நம என்னும் பஞ்சாட்சர மந்திரங்கள் சொல்லி வழிபட்டு வரவும்.மாலையில் வில்வ இலையில் அர்ச்சனை செய்து இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகள் பார்த்து கடைசிகால பூஜை வரை பார்க்க வேண்டும்.மறுநாள் காலை அன்னதானம் செய்து சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும் நம் குல தெய்வத்தை
வணங்க மறந்து விடகூடாது.ஏன்என்றால் நமது முன்னோர்கள் பரம்பரை
பரம்பரையாக அந்த தெய்வத்தை வழிபட்டு நமக்கு அடையாளம் காட்டி
விட்டு சென்று இறுகின்றனர்.ஆகையால் நமது குலதெய்வத்தை
வழிபட மிக சிறந்த நாள் மஹா சிவராத்திரி ஆகும்.இந்த நாளில் குலதெய்வவழிபாடு செய்தால் நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.

தற்போது கூட்டு குடும்பத்தில் இருந்து விடுபட்டு கூட்டு குடும்பங்களே
இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இந்த மகா சிவராத்திரி நாளில்
இருந்து குல தெய்வதை வணங்கியும்,சிவபெருமானை வழிபட்டும்
ஒற்றுமையாக வாழ வழிபடுவோமாக.



                      ஓம் நமசிவாய!

தைப்பூசம்





தைப்பூசம் வருகின்ற பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி ஆகும்.அன்று முருகபெருமானின் ஸ்தலங்களுக்கு சென்று முருகபெருமானை
வேண்டி வழி பட்டு வந்தால் சகலசௌபாக்கியங்களும் கிடைக்கும்.
முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசம் மிகவும்
விசேஷம்.சென்னையில் உள்ளவர்கள் வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு சென்று முருகனை வணங்கி அருள்பெறலாம்.

வடபழனி ஆண்டவர் கோயில் தின்ற மூல காரணமாக இருந்தவர் அண்ணா சாமி தம்பிரான்.தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு
காணிக்கை செலுத்தியவர்.இதற்கு பாவாடம் என்று பெயர்.
அண்ணாசாமி தம்பிராநின் தொண்டர் ரத்தினசாமி தம்பிரானும் முருகனுக்காக பாவாடம் செய்தவர்.ஒரு சிறிய கீற்று கொட்டகையில்
முருகன் படத்தை பூஜை செய்து வந்தார்.அந்த இடமே வடபழனியாக
மாறியது.

வடபழனி கோயிலின் கர்ப்பகிரகத்தை அமைத்து வழிபாடு செய்தவர்.
பக்கியளிங்கதம்பிரான்இவரும் வடபழனி கோவிலுக்கு பாவாடம் செய்தவர்
மூவருக்கும் கோவிலுக்குள் சந்நிதி உள்ளது.

வடபழனி ஆண்டவர் கோயிலில் செவ்வாய் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.செவ்வாய் அன்று இவரை வழி பட்டு வந்தால்செவ்வாய் தோஷம்நீங்கி திருமணம் கைகூடும்.தைப்பூசம் அன்று முருகபெருமானை
வழி பட்டு முருகனின் அருளை பெறுவோம்.


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

Sunday 18 January 2015

கிரகங்களுக்கு உரிய ரத்தினங்கள்





சூரியன்
மாணிக்கம்
சந்திரன்
முத்து
செவ்வாய்
பவளம்
புதன்
மரகதபச்சை
குரு
கனகபுஷ்பரகம்
சுக்கிரன்
வைரம்
சனி
நீலக்கல்
ராகு
கோமேதகம்
கேது
வைடூரியம்

கிரகங்களுக்கு உரிய நிறங்கள்

கிரகங்களுக்கு உரிய நிறங்கள்




சூரியன்
சிவப்பு
சந்திரன்
வெள்ளை
செவ்வாய்
சிவப்பு
புதன்
பச்சை
குரு
மஞ்சள்
சுக்கிரன்
வெள்ளை
சனி
கருப்பு
ராகு
கருப்பு
கேது
பலகலர்

Saturday 10 January 2015

தை பொங்கல் மற்றும் சூரிய பகவான் –பாகம் 2

தை பொங்கல் மற்றும் சூரிய பகவான் –பாகம் 2



நவக்கிரகங்களில் இவர் சுபக்கிரகம்,சகல சௌபாக்கியங்களையும்,
அதிர்ஷ்டத்தையும் அள்ளி தருவார்.சூரியனை தினசரி காலை
காயத்ரி மந்திரம் சொல்லி வழி கிடைக்கும்.கண்நோய்,இருதய நோய்
தீரும்.உடலில் உள்ள நோய்கள் அகலும்.பிரகாசமான வாழ்க்கை அமையும்.
ஆதித்ய ஹ்ருதயம் படித்து வந்தால் எந்த காரியத்தையும் சாதிக்கும் வல்லமை கிடைக்கும்.ரதத்தில் உள்ள ஏழு சக்கரங்களே காலச்சக்கரம் ஆகும். ஏழு குதிரைகளே ஏழு நாட்களாக கணக்கிட படுகிறது.வாரத்தின் முதல் நாளை ஞாயிறு என்று அழைக்கிறோம்.

சூரியனுக்கு உரிய திதி சப்தமி ஆகும்.தை அமாவசைக்கு பிறகு
வளர் பிறையில் வரும் சப்தமி திரத சப்தமி என்று  அழைக்கபடுகிறது.
அன்று விரதம் இருந்து சூரிய பகவானை வழிபட்டால் சகல சௌபாக்கியங்கள் உண்டாகும் என்று சொல்லபடுகிறது.
மகாபாரத்தில் சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர்களில் தர்மர் ஆதித்ய மந்திரத்தை சொல்லி சூரிய பகவானிடம் இருந்து அள்ள அள்ள
குறையாத அட்சய பாத்திரத்தை பெற்றார்.சூரிய புராணத்தில் நாரதர் சூரியனின் பெருமைகளையும், சப்தமி விரதம் பற்றியும் எடுத்து கூறியுள்ளார்.

ஜோதிடத்தில் சூரியன் தந்தையின் நிலை பற்றி எடுத்து கூறும் கிரகமாகும்.தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில் சென்று வழிபட்டால் எல்லா விததோஷங்களும் நீங்கும்.ஜாதகத்தில் சூரிய தோஷம் உள்ளவர்கள் தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்து கோதுமை தானம் செய்து வந்தால் தோஷம் நீங்கும்.மோதிர விரலில் மாணிக்கம் கல் அணிந்து வரலாம்.

ஞாயிறு தோறும் சிவபெருமான கோவிலுக்கு சென்று விரதம் இருந்து
வழிபட்டு வரலாம்.தினசரி வீட்டில் விளக்கேற்றி சூரியன் மந்திரங்களை
சொல்லி வழி பட்டு வந்தாலும் தோஷம் நீங்கும்.கண்கண்ட தெய்வமானசூரிய பகவானை வழிபட்டு வந்தால் தெய்வ பலம்,

ஆத்ம பலம் பெறுவார்கள்.

Monday 5 January 2015

தை பொங்கல் மற்றும் சூரிய பகவான் பாகம் 1

தை பொங்கல் மற்றும் சூரிய பகவான் 



சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதத்தில் ஒவ்வொரு ராசியில்
சஞ்சாரம் செய்கிறார்.மகரராசியில் சஞ்சாரம் செய்யும் நாளை
“தை பொங்கல்” என்று சொல்வர்.வடநாட்டில் இந்த நாளை
“மகர சங்கராந்தி” என்பார்கள்.மார்கழி மாதத்தின் கடைசி நாளை “போகி
பண்டிகை” என்று கொண்டடுவார்கள்.பழைய தேவை இல்லாத பொருட்களை அன்று தீயிட்டு கொளுத்துவார்கள்.

பழையன கழிதலும்,புதிய புகுதலும் என்பதிற்கு ஏற்ப “தை பிறந்தால்
வழி பிறக்கும்” என்று சொல்வார்கள்.பொங்கல் பானையில் பச்சரிசி,
வெல்லம் போட்டு பொங்கல் வைக்கும் பொது பொங்கி வழியும்.
அப்போது”பொங்கலோ பொங்கல்” என்று சொல்லி வணங்கும் போது
எல்லா நன்மைகளும் வீட்டில் நடக்கும் என்பது ஐதீகம்.

சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்வதை உத்திராயணம் என்றும்,
தெற்கு நோக்கி பயம் செய்வதை தட்சிநாயணம் என்றும் கூறுவார்.
மகாபாரத்தில் பீஷ்மர் உத்திராயணம் காலம் வரும் வரை தன் உயிரை
விடாமல் அம்பு படுக்கையில் படுத்திருந்தார்.தை மாதம் பீஷ்மர் உயிர் துறந்த நாளான அஷ்டமி திதி “பீஷ்மாஷ்டமி” என்று சொல்லபடுகிறது.

பொங்கல் சூரியனுக்கு மகத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது
காஷ்யப மகரிஷிக்கும்,அதிதிக்கும் பன்னிரு ஆதித்யர்கள் ஸ்ரீமன்
நாராயண சொருபியக பிறந்ததனால்சூரியன் என பெயர் பெற்றார்
என்று பாரதம் கூறுகிறது.”ஓம்” என்ற ஒலியில் இருந்து சூரியன் தோன்றினார் என்று மார்கண்டேய புராணம் கூறுகிறது.
காஷ்யபருக்கும்,வினதைக்கும் கால்,கை முழுமையாக வளராத
பாலகன் பிறந்தான்.இவன் அருணன்.இந்த காலில்லா அருணனை சாரதியாக கொண்டவர் சூரியன்.”கால நேமி” ஒற்றை சக்கரம் பொருந்தியதே சூரியனின் விசாலமான தேராகும்.காயத்ரி,ப்ரகதி,
உஷ்ணிக்,ஜகதி,த்ரூஷ்டுப்,அனுஷ்டுப்,பங்க்தி என்னும் ஏழு பச்சை

குதிரைகளே பூட்டப் பட்டிருக்கும்.


Saturday 3 January 2015

வெற்றி தரும் ஏழு திவ்யமந்திரங்கள்

ஏழு திவ்யமந்திரங்கள்




1.       ஓம் நமோ வேங்கடேசாய நமஹ!
2.       ஓம் நமோ நாராயணாய நமஹ!
3.       ஓம் நமோ லட்சுமி நாராயணாய நமஹ!
4.       ஓம் நமோ சத்ய நாராயணாய நமஹ!
5.       ஓம் நமோ பகவதே வாசு தேவாய நமஹ!
6.       ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ!
7.       ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

இந்த ஏழு திவ்ய மந்திரங்களை தினந்தோறும் எழுதி
வந்தாலோ அல்லது சொல்லி வந்தாலோ நினைத்த

அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.