Saturday 7 March 2015

திருநின்றவூர் பக்தவச்சலபெருமாள் கோயில்




வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவை பிரிந்து திருவாகிய
மகாலட்சுமி நின்ற ஸ்தலம் என்பதால் “திருநின்றவூர்” என்ற பெயர் ஏற்பட்டது.பிரிந்த தாயாருக்கு காட்சி தந்து மகாவிஷ்ணு மணந்து
கொண்டதல் சுக்கிர தோஷம்  உடையவர்கள்  இங்கு வந்து வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள்.பங்குனி மாதம்
தேய்பிறை திருவோண நட்சத்திரத்தில் வரஹா அவதாரம் எடுத்து
காட்சி தந்ததால் இந்நாளில் பக்தவச்சல பெருமாளை வழிபட்டால்
சுக்கிர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

மாங்கல்ய தோஷம் உடையவர்கள் கணவனை பிரிந்த பெண்கள்
ஒரு தாலி வாங்கி வந்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அதை தாயார்
பாதத்தில் வைத்து பூஜை செய்து தருவார்.அதை அணிந்து கொண்டு பழைய தாலியை கழற்றி விடுவார்கள்.இதனால் தங்களுக்கு மறு
வாழ்வு கிடைக்கும்  என நம்புகிறார்கள்.
மகளின் வாழ்க்கை நன்றாக அமைய தாயாரிடம் பெற்றோர்கள் வேண்டி கொண்டால் நல்ல வாழ்க்கை அமையும்.தாயார் சன்னதியில் குபேர எந்திரம் தரபடுகிறது.அதை வாங்கி வீட்டில்
வைத்து 9 நாட்கள் வழிபட்டு பூஜை செய்து கோவிலில் ஒப்படைத்து
விடவேண்டும்.ஒன்பது சுமங்கலிகளுக்கு வெற்றிலை,பாக்கு,மஞ்சள்,
பூ தந்து வந்தால் லக்ஷ்மி கடாச்சம் கிடைக்கும்.செல்வா விருத்திக்காக குபேர எந்திரம் வைத்து வைபவ லக்ஷ்மி பூஜை செய்கின்றனர்.

நாகதோஷம்,களத்திரதோஷம் உடையவர்கள் பால்,பாயசம்
நிவேத்தியம் செய்து 12 குழந்தைகளுக்கு வாழைபழம் கொடுத்து
வேண்டி கொண்டால் தோஷம் நீங்கும்.கை,கால்,காது தொடர்பான
பிரச்சனைகள் உடையவர்கள் ஜென்ம நட்சத்திரம்,ஆயில்யம்
நட்சத்திரம் அன்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நிவர்த்தி உண்டாகும்.

இதய நோய் உள்ளவர்கள்  இக்கோயிலுக்கு அருகே உள்ள
திரு இருதயாலீஷ்வரரை வழிபட்டால் நிவர்த்தி உண்டாகும்.

இருப்பிடம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் பஸ்களில் சென்றால் திருநின்றவூரை அடையலாம்.
சென்னையில் இருந்து 33 கி.மீ தூரம் உள்ளது.ரயில்வே ஸ்டேஷநில்
இருந்து 1 கி.மீ தூரத்தில் கோயில் உள்ளது.

திறக்கும் நேரம்

காலை 7.3௦ to 11.3௦
மாலை 4.30 to 8.3
போன்: ௦44-26390434


No comments: