Saturday 6 December 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் - மகர ராசி (உத்திராடம் 1, 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2 -ம் பாதங்கள்)

எதையும் சாமர்த்தியமாக சாதிக்கும் மகர ராசிக்காரர்களே! இதுவரை 10-ம் இடத்திலிருந்த சனிபகவான் தற்போது  11-ம் இடத்திற்கு வருகிறார். இதுவரை தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சுப யோகத்தை கொடுப்பார். லாபஸ்தானமான 11-ம் இடம் மிகவும் நல்ல இடம். பொருளாதாரம் மேன்மை அடையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகன யோகம் அமையும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும். பலருடைய பாராட்டை பெறுவீர். எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மையே தருவார். 
   
பரிகாரம்: ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். காளிகாம்பாளை வழிபட்டு வரவும்.

No comments: