Tuesday 23 December 2014

வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு



இந்த வருடம் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி 2015 வருடம் வருவது மிகவும் சிறப்பானதாகும். ஏகாதேசி எதற்காக கொண்டாடுகிறார்கள் என்பதை பார்ப்போம். பத்ம புராணத்தில் உள்ள கதையின்மூலமாக கொண்டாடப்படுகிறது. முரண் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தி வந்தான்.

அவனுடைய தொல்லைகளை தாங்க முடியாமல் தேவர்கள் பெருமாளிடம் சென்று முறை இட்டனர். பெருமாள் அசுரனை அழிக்க புறப்பட்டார். இருவருக்கும் கடுமையான யுத்தம் நடைபெற்றது. பகலில் போர் முடிந்து இரவில் ஒரு குகையில் பெருமாள் படுத்திருந்த நேரத்தில் முரண் தாக்கத் தொடங்கினான். அப்போது பெருமாளின் உடலில் இருந்து ஒரு பெண் ஷக்தி தோன்றி பல ஆயுதங்களுடன் விஸ்வரூபம் எடுத்து முரண் அரக்கனைக் கொன்றாள்.

விஷ்ணு, அந்த பெண் சக்திக்கு ஏகாதசி என்று பெயர் இட்டு இந்த ஏகதேசி நாளில் விரதம் இருந்து என்னை வழிபடுபர்களுக்கு எல்லா வளங்களும் பெற்று மறுபிறவியில் வைகுண்ட பதவியும் கிடைக்கும் என்று வரம் அளித்தார்.

எல்லா விரதங்களையும் விட ஏகாதசி விரதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. திருமால் கூர்ம அவதாரம் ஆமையாகவும், அமிர்த கலசம் ஏந்தி தன்வந்தரி ஆகவும், அமிர்தம் தேவர்களுக்கு வழங்கிய மோகினி அவதாரம் எடுத்த நாள் ஏகாதேசி ஆகும்.

ஏகாதசி அன்று சாப்பிடாமல் உபவாசம் இருந்து திருமாலின் பெருமைகளைப் படித்தும், கேட்டும் மனதார வேண்டி சொர்க்கவாசல் திறக்கும் பொது பெருமாளை தரிசனம் செய்து வேண்டினால், அனைத்து வளமும் பெற்று மறுபிறவியில் சொர்க்கத்திற்கு செல்வோம் என்று சொல்லப்படுகிறது.

விரதங்களில் மிகச் சிறந்த விரதம் ஏகாதசி. ருக்மாங்கதன் என்ற மன்னன் ஏகாதசி விரதம் இருந்து துர்வாச முனிவரை அடக்கிவைத்த பாக்கியத்தை பெற்றான்.

தினமும் காலையில் எழுந்ததும் அதிகாலையில் பரம பாகவதர்களைப் பற்றிய மந்திர ஸ்லோகத்தை சொல்வது சிறப்பு.

ப்ரஹலாத நாரத பாராசர புண்டரீக
  வியாச அம்பரிஷ சௌனக பீஷ்ம தால்ப்யான்!
  ருக்மாங்கத அர்ஜுன வசிஷ்ட வீபிஷ்ணாதீன்
  புன்யான் இமான் பரம பகவதான் ஸ்மராமி!

அம்பரீஷன், ருக்மாங்கதன் இரு மன்னர்கள் ஏகாதேசி விரதமிருந்து திருமாலின் அடியவர் வரிசையில் இடம் பிடித்துள்ளனர். நாமும் விஷ்ணு பகவானை வேண்டி ஏகாதேசி விரதமிருந்து வாழ்வில் வளம் பெறுவோம்.

No comments: